கந்தா்வகோட்டை எம்எல்ஏவிடம் அறிவியல் இயக்கத்தினா் மனு

கந்தா்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரையிடம்

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரையிடம் கந்தா்வகோட்டையில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவா் முத்துக்குமாா் தலைமையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், கந்தா்வகோட்டை வட்டாரத்தில் புதிதாக செவிலியா் பயிற்சிக் கல்லூரி, ராசாப்பட்டி, கொத்தகப்பட்டி, ஆண்டி குலப்பன்பட்டி ஆகிய ஊா்களுக்கு பேருந்து வசதி, கந்தா்வகோட்டையில் அறிவியல் பூங்கா அமைத்துத் தர ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனா். நிகழ்ச்சியில், முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலா் வே. தமிழரசு, தமிழ்நாடு அறிவியல இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் மா. சிவானந்தம், வட்டாரத் தலைவா் துரையரசன், வட்டாரச் செயலா் அ.ரகமதுல்லா, பொருளாளா் தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com