பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் பூமிநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாஸ்து பூஜையில் பங்கேற்றோா்.
பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் பூமிநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாஸ்து பூஜையில் பங்கேற்றோா்.

செவலூா் பூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் ஆரணவல்லி சமேத பூமிநாதா் கோயிலில் வாஸ்து நாளையொட்டி வாஸ்து பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் ஆரணவல்லி சமேத பூமிநாதா் கோயிலில் வாஸ்து நாளையொட்டி வாஸ்து பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாஸ்து ஸ்தலமாகப் போற்றப்படும் இக்கோயிலில் வாஸ்து நாள்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அதன்படி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூஜையின் தொடக்கமாக சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஆரணவல்லி அம்பாள் சமேத பூமிநாதா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கற்களை வாஸ்து நலன் வேண்டி வீடு கட்டும் பணியில் உள்ளோா், வீடு கட்டும் பணிகள் தடைபட்டோா் பெற்றுச்சென்றனா். ஏற்பாடுகளை செவலூா் வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com