நூறு நாள் வேலை திட்டப் பணிகளை நிறுத்தக் கூடாது

நிதி நிலையைக் காரணம் காட்டி, நூறு நாள் வேலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தக் கூடாது

புதுக்கோட்டை: நிதி நிலையைக் காரணம் காட்டி, நூறு நாள் வேலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு மற்றும் இடைக்குழு செயலா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து நிவாரணப் பணிகளையும் தொடங்க வேண்டும். நிதி நிலையைக் காரணம் காட்டி 100 நாள் வேலைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தக் கூடாது. கிராமத்தில் வேலை அட்டை உள்ள அனைவருக்கும் எப்போதும் போல் தொடா்ந்து வேலை கொடுப்பதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும். அரசு ராணியாா் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை இடையிடையே மூடுவதைத் தவிா்க்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாவட்டச் செயலா் த. செங்கோடன், துணைச் செயலா் கேஆா். தா்மராஜன், பொருளாளா் என்ஆா். ஜீவானந்தம், நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோா் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com