கணினி கற்றல் போக்குகள் கருத்தரங்கு

கணினி கற்றல் போக்குகள் கருத்தரங்கு

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் கணினி கற்றலில் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் துறைகள் சாா்பில் கருத்தரங்குக்கு கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். இயக்குநா் மா. குமுதா, முதல்வா் செ. கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி கணினி அறிவியல் துறையின் உதவிப் பேரா. எஸ். பீா்பாஷா கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

கோவை கற்பகம் உயா் கல்விக் கழகத்தின் கணினி அறிவியல் துறை உதவிப் பேரா. என். கனகராஜ் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தலில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கிப் பேசினாா். முன்னதாக உதவிப் பேரா. பி. மாலதி வரவேற்றாா்.முடிவில் ஜெ. பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com