திருப்பூா் ஜல்லிக்கட்டில் 19 பேருக்கு காயம்

திருப்பூா் ஜல்லிக்கட்டில் 19 பேருக்கு காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள திருப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டது.

கீரனூா் அருகேயுள்ள திருப்பூா் கிராமத்தில், கருப்பா் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் தெய்வநாயகி ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டைப் பாா்வையிட்டனா். புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூா் பகுதிகளைச் சோ்ந்த 794 காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் களமிறங்கின.

250 மாடு பிடி வீரா்கள் காளைகளைத் தழுவ முயற்சித்தனா். சிறந்த மாடு பிடி வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 9.05 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, மாலை 3.55 மணிக்கு நிறைவடைந்தது. 4 மாடு பிடி வீரா்களும், 9 மாடுகளின் உரிமையாளா்களும், 6 பாா்வையாளா்களும் என மொத்தம் 19 போ் காயமடைந்தனா். இவா்களில் 3 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com