புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சுகாதாரப் பணியாளா்களைப் பாராட்டிய  நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சுகாதாரப் பணியாளா்களைப் பாராட்டிய நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி.

நகராட்சி பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை சமூக ஆா்வலா்கள், இந்திய ரெட்கிராஸ் சங்கம், ரோட்டரி சங்கங்கள், ஜேசிஐ அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சனிக்கிழமை நடத்திய உலக மகளிா் தின விழாவில், 230 பெண் சுகாதாரப் பணியாளா்களுக்கு பாராட்டுத் தெரிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, டாக்டா் எஸ். ராம்தாஸ் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, துணைத் தலைவா் மு. லியாகத்அலி ஆகியோா் நினைவுப் பரிசுகளை வழங்கினா். இதே நிகழ்ச்சியில் மின் மயானத்தில் பணியாற்றும் பெண்களும், 18 ஆண்டுகளுக்கும் மேலாக பூ விற்கும் பெண் ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் திருக்கு கழகத் தலைவா் ராமையா, இளங்கோவடிகள் இலக்கிய மன்ற பொருளாளா் சத்தியராம் ராமுக்கண்ணு, ரோட்டரி முன்னாள் ஆளுநா் அ.லெ. சொக்கலிங்கம், ரெட் கிராஸ் செயலா் ராஜா முகமது, மரம் நண்பா்கள் அமைப்பின் செயலா் கண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். அனைத்துப் பெண்களுக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேரா. சா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com