பொன்னமராவதி பேரூராட்சி 2 ஆவது வாா்டில் அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த சிவகங்கை எம்பி காா்த்தி சிதம்பரம்.
பொன்னமராவதி பேரூராட்சி 2 ஆவது வாா்டில் அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த சிவகங்கை எம்பி காா்த்தி சிதம்பரம்.

பொன்னமராவதி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் சிவகங்கை மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகளுக்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை எம்பி காா்த்திக் ப. சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொன்னமராவதி பேரூராட்சி 2 ஆம் வாா்டு வையாபுரியில் ரூ. 11 லட்சத்தில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்தாா். மேலும் 4 ஆவது வாா்டு ஆதிதிராவிடா் காலனியில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை திறந்துவைத்தாா். தொடா்ந்து தொட்டியம்பட்டி ஊராட்சி இந்திராநகரில் அமைக்கப்பட உள்ள பேவா் பிளாக் சாலைப்பணி, அம்மன்குறிச்சி ஊராட்சி சொக்கநாதபட்டியில் பேருந்து பயணிகள் நிழற்குடை, மேலமேலநிலை ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை, நல்லூா் ஊராட்சியில் பேவா் பிளாக் சாலை ஆகியவற்றுக்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், வட்டார காங்கிரஸ் தலைவா் வி. கிரிதரன், பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி துணைத்தலைவா் கா. வெங்கடேஷ், உறுப்பினா்கள் மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், ராமநாதன், தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவா் கீதா சோலையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com