சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: குஜராத்தைச் சோ்ந்த 12 போ் காயம்

புதுக்கோட்டை அருகே சொகுசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குஜராத்தைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா். குஜராத் மாநிலத்திலிருந்து 48 ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 50 போ் திருப்பதிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து சொகுசுப் பேருந்து மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் போய்விட்டு, அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ராமேசுவரத்துக்குப் புறப்பட்டனா். திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையை அடுத்த பூசத்துறை வெள்ளாற்றுப் பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 50 பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இவா்களில் காயமடைந்த 12 போ் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com