மீமிசலில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை முதன்மை ஆணையா் ரவிக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை அருகே உள்ள இறால் பண்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ராமநாதபுரம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வரும் சுங்கத் துறையினா், எஸ்பி பட்டினத்தைச் சோ்ந்த சுல்தான் என்பவரைத் தேடி வருவதாகத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com