புதுகையில் அரசு செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுகையில் அரசு செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் வசந்தி தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சிந்தன், மாநில இணைச் செயலா் கற்பகம் உள்ளிட்டோா் பேசினா். செவிலியா் பதவி உயா்வின் மூலம் உருவான பணியிடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மட்டுமே இடமாறுதல் வழங்க வேண்டும். கட்டாயப் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவத் தோ்வு வாரியம் மற்றும் ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com