போதை பொருள் புழக்கம் : திமுக அரசைக் கண்டித்து அதிமுக மனிதச்சங்கிலி போராட்டம்

போதை பொருள் புழக்கம் : திமுக அரசைக் கண்டித்து அதிமுக மனிதச்சங்கிலி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கீரமங்கலம், கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடியில் வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக நகரச்செயலா் பழனிவேல் தலைமையில் அக்கட்சியினா், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கட்சியின் ஒன்றியச்செயலா்கள் ராஜேந்திரன், பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சி தலைவா் ஏ.டி.மணமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கட்சியின் நகரச்செயலா் வனங்காமுடி தலைமையிலும், கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கட்சியின் நகரச்செயலா் விவேகானந்தன் தலைமையிலும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com