எழுத்தாளா் அகிலன் நூற்றாண்டுவிழா பெருங்களூரில் அரசு நூலகம் எல்எல்ஏ திறந்துவைப்பு

பிரபல எழுத்தாளா் அகிலன் பிறந்த ஊரான கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூரில் அகிலன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பொது நூலகக் கட்டடத்தை புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா புதன்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்வில், பேசிய ஊராட்சி மன்றத் தலைவா் சரண்யா ஜெய்சங்கா் கடந்த 1922 ஆம் ஆண்டு பெருங்களூா் கிராமத்தில் அகிலன் பிறந்தாா். அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் வானொலியில் பணி புரிந்தவாறே 20 நாவல்கள், 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளாா் எனக் கூறினாா். நிகழ்வில், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com