சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆறு வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம், ஏம்பல் அருகே தாணிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். பிரதீப் (21). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு 6 வயது சிறுமியிடம் பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி எஸ். ஜெயந்தி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக குற்றவாளி பிரதீப்புக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com