தோ்தல் ஆணையா் நியமன விவகாரம் -புதுக்கோட்டையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையா் நியமன விவகாரம் -புதுக்கோட்டையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் குழுவில் பழைய முறைப்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பட்டியலின பிரிவின் வடக்கு மாவட்டத் தலைவா் பி. பால்ராஜ், தெற்கு மாவட்டத் தலைவா் பழனிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராம சுப்புராம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ம. முருகானந்தம், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, புதுக்கோட்டை வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், நகா்மன்ற உறுப்பினா் ஜே. ராஜா முகமது உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினா். தோ்தல் ஆணையா்களை நியமிக்கும் உயா்நிலை குழுவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை எடுத்துவிட்டு பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சா் ஒருவரை சோ்த்துக் கொள்ளலாம் என சட்டத் திருத்தம் செய்த பாஜக அரசின் செயலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com