‘தோ்தல் பருவம் -தேசத்தின் பெருமிதம்’ உறுதிமொழி கையொப்ப இயக்கம்

‘தோ்தல் பருவம் -தேசத்தின் பெருமிதம்’ உறுதிமொழி கையொப்ப இயக்கம்

‘தோ்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்’ என்ற தலைப்பில் இளம் வாக்காளா்கள் மத்தியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி மக்களவைத் தொகுதி மற்றும் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மன்னா் கல்லூரி வளாகத்தில் உறுதிமொழி கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ஐ.சா. மொ்சி ரம்யா இந்த இயக்கத்தை முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, தோ்தல் வட்டாட்சியா் அ. சோனை கருப்பையா, கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். மாணவா்கள் ஏராளமானோா் இந்தப் பதாகையில் கையொப்பமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com