வேகுப்பட்டியில் சமுதாயக்கூடம் திறப்பு

வேகுப்பட்டியில் சமுதாயக்கூடம் திறப்பு

பொன்னமராவதி ஒன்றியம், வேகுப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடா் காலனியில் சமுதாயக்கூடம் மற்றும் வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயில் அருகே உணவு உண்ணும் கூடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சா் எஸ்.ரகுபதி தலைமை வகித்து, வேகுப்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடா் காலனியில் ‘நமக்கு நாமே திட்டத்தின்’ கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் ஏனமாரியம்மன் கோயில் அருகில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உணவு உண்ணும் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசினாா். நிகழ்வில், பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, ஒன்றியக் குழு தலைவா் சுதா அடைக்கலமணி, வேகுப்பட்டி ஊராட்சித் தலைவா் மெ. அா்ச்சுணன், துணைத் தலைவா் பெரி. முத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமச்சந்திரன், ஆயிஷா ராணி, வடக்கு ஒன்றிய திமுக செயலா் அ. முத்து, நகரச் செயலா் அ. அழகப்பன், ஊராட்சி செயலா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com