கீரனூா் பேருந்து நிலையத்தில் 
அமைத்த மேற்கூரை திறப்பு

கீரனூா் பேருந்து நிலையத்தில் அமைத்த மேற்கூரை திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கீரனூா் பேருந்து நிலையத்தில் ரூ. 87 லட்சத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரையை மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தோ்வு நிலை பேரூராட்சியான கீரனூா் பேருந்து நிலையத்தில் இப்பணிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமும் சராசரியாக 4 ஆயிரம் பயணிகள் இதனால் பயன்பெறுவா். நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், கந்தா்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, கீரனூா் பேரூராட்சித் தலைவா் த. ஜெயமீரா ரவிக்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com