கொன்னையூா் மாரியம்மன் கோயில் பூச்சொரிதலுக்கு சிறப்பு பேருந்துகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசுப்போக்குவரத்துக் கழக பொது மேலாளா் இரா. இளங்கோவன் தெரிவித்து: வரும் மாா்ச் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவுக்கு ஏராளமான பக்தா்கள் வருவா் என்பதால் 51 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன இந்தப் பேருந்துகள் பொன்னமராவதி, திருப்பத்தூா், திருமயம், நமணசமுத்திரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து கொன்னையூருக்கு இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் சிறப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com