அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. வடகாடு ஊராட்சி வடக்குப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி சாா்பில் நடைபெற்ற பேரணியில் ாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திய ஊா்வலமாக முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனா். பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா். விராலிமலையில்.. இதேபோல விராலிமலை ஒன்றியம் செரளப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பேரணிக்கு தலைமை ஆசிரியா் ஜான் சவுந்தரராஜ் தலைமை வகித்தாா். இதில், 5 வயது பூா்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் கட்டாயம் சோ்க்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com