கந்தா்வகோட்டையில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் திறப்பு

கந்தா்வகோட்டையில் முன்னாள் முதல்வா் கலைஞா் நூற்றாண்டு விழா நூலகத் திறப்பு விழா இளைஞரணி துணைச் செயலா் இளையராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். நூலகத்தை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் திறந்து வைத்துப் பேசினாா். நூலகத்துக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் 100 நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் எம். பரமசிவம், வடக்கு ஒன்றியச் செயலா் மா. தமிழய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சண்முகம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நா. ஸ்டாலின் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com