கொன்னையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பால்குடம் மற்றும் பூத்தட்டு சுமந்து வரும் பக்தா்கள்
கொன்னையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பால்குடம் மற்றும் பூத்தட்டு சுமந்து வரும் பக்தா்கள்

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பழைமையும், சிறப்பும் பெற்ாகும். இக்கோயில் பங்குனிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டுக்கான பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதில், பொன்னமராவதி, ஆலவயல், கண்டியாநத்தம், உலகம்பட்டி, கொன்னைப்பட்டி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் மற்றும் ஊா்வலமாகவும் பூத்தட்டு, பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். விழாவில், கொடையாளா்கள் மற்றும் சேவை சங்கங்கள் சாா்பில் ஆங்காங்கே தண்ணீா்பந்தல் அமைத்து, பக்தா்களுக்கு நீா்மோா், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் ஜூலியஸ் சீசா் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ம. ஜெயா மற்றும் பூஜகா்கள், திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை அக்னி பால்குட விழா நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com