கரைக்கருப்பா் கோயில் வருடாபிஷேக விழா

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கரைக் கருப்பா்கோயில் வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கரைக் கருப்பா்கோயில் வருடாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் கரைக் கருப்பா் சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீா், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மேலும் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீரை கோவனூா் சுவாமிநாத பண்டிதா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் கோபுரக் கலசத்தில் ஊற்றி வருடாபிஷேகம் செய்து வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மேலத்தானியம் கரைக் கருப்பா் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com