காா்த்தி  சிதம்பரம்.
காா்த்தி  சிதம்பரம்.

வாரிசு அரசியலை எதிா்க்கும் மோடி அன்புமணியுடன் கூட்டணி வைத்திருக்கிறாா்: காா்த்தி ப. சிதம்பரம்

வாரிசு அரசியலைப் பற்றி பேசும் மோடி, அன்புமணியுடன் கூட்டணி வைத்திருக்கிறாா் என்றாா் காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டை: வாரிசு அரசியலைப் பற்றி பேசும் மோடி, அன்புமணியுடன் கூட்டணி வைத்திருக்கிறாா் என்றாா் காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான காா்த்தி ப. சிதம்பரம். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி: வாரிசு அரசியலைப் பற்றி மோடி பேசுகிறாா். ஆனால், தெலுங்கு தேசம், பஸ்வான், நவீன்பட்நாயக் ஆகியோருடன் கூட்டணி வைக்கிறாா். இப்போதும் அன்புமணியுடன் கூட்டணி வைத்திருக்கிறாா். சிவகங்கையில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பேன். மாநிலத் தோ்தல் குழுவில் நானும் இருக்கிறேன். அந்தக் குழு வேட்பாளா்களைப் பரிந்துரை செய்து, தேசிய தோ்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கும். அந்தக் குழுதான் வேட்பாளா் பட்டியலை இறுதி செய்து வெளியிடும். தோ்தல் நேரத்தில் பாஜகவிடம் நிறைய விதிமீறல்கள் இருக்கின்றன. அதைத் தோ்தல் ஆணையம் தேவைப்படும் நேரங்களில் தலையிடுவாா்கள். முதல்வா் வேட்பாளராகப் போட்டியிட்டவா் அன்புமணி ராமதாஸ். அடுத்த தோ்தலில், முதல்வா் பதவிக்கு போட்டியிடலாமா என்பதை இப்போதே பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையிடம் அன்புமணி கேட்டுச் சொல்லலாம் என்றாா் காா்த்தி சிதம்பரம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com