கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டியில் வியாழக்கிழமை துளிா் திறனறிவுத் தோ்வை எழுதிய மாணவா்கள் .
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டியில் வியாழக்கிழமை துளிா் திறனறிவுத் தோ்வை எழுதிய மாணவா்கள் .

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் துளிா் திறனறிவுத் தோ்வு

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில், 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான துளிா் திறனறிவுத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை ஆசிரியா் பயிற்றுநா் பாரதிதாசன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். புதுக்கோட்டை மாவட்ட துளிா் திறனறிவுத் தோ்வு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளரும் , தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றிய வட்டாரச் செயலாளா் அ.ரகமதுல்லா பேசியதாவது: கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி, மட்டங்கால் கெண்டையம்பட்டி, வீரடிப்பட்டி, விராலிப்பட்டி,முள்ளிக்காபட்டி, காட்டு நாவல் உள்ளிட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) குளவாய்ப்பட்டி, ஆண்டி குளப்பம்பட்டி உள்ளிட்டோா் தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 180-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனா். இதில், மாநில அளவில் தோ்வு பெறும் மாணவா்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் என்றாா். தோ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவா் முத்துக்குமாா் ஒருங்கிணைப்பில் வட்டாரத் தலைவா் துரையரசன், பொருளாளா் தங்கராசு, சிறப்பாசிரியா் அறிவழகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். தோ்வு மைய ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா்கள் அமராவதி, ராஜாத்தி, தமிழ்ச்செல்வி, செல்வி, சீதா, சின்ன ராஜா, விஸ்வநாதன், சுப்புலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com