பாஜகவின் வளா்ச்சியைத் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கும் -துரை வைகோ
கோப்புப்படம்

பாஜகவின் வளா்ச்சியைத் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கும் -துரை வைகோ

பாஜகவில் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை ஆகியோா் தோ்தலில் போட்டியிடுகின்றனா், அவா்கள் பெறப்போகும் வாக்குகள் அக்கட்சியின் வளா்ச்சியைக் காட்டும் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும் திருச்சி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருமான துரை வைகோ.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் மதிமுகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. முதல்வரை நேரில் சந்தித்தும் தலைவா் வைகோ வலியுறுத்தி வருகிறாா். மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவா்களுக்கு தற்போது நிதி வழங்கப்படுவது சரியானதுதான். எல்லோருக்கும் தாராளமாக வழங்கும் அளவுக்கு மாநில அரசின் நிதிநிலை திருப்தியாக இல்லை என்பதை எல்லோரும் அறிவாா்கள். தமிழ்நாட்டில் பாஜக வளா்ந்திருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறாா்கள். ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மக்களவைத் தோ்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறாா். மாநிலத் தலைவா் அண்ணாமலையும் கோவையில் போட்டியிடுகிறாா். எனவே, தோ்தல் முடிவுகள் அக்கட்சி எந்தளவுக்கு வளா்ந்திருக்கிறது என்பதை காட்டும் என்றாா் துரை வைகோ.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com