புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு வியாழக்கிழமை பொன்னாடை அணிவித்து ஆதரவு கோரிய மதிமுக வேட்பாளா் துரை வைகோ
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியனுக்கு வியாழக்கிழமை பொன்னாடை அணிவித்து ஆதரவு கோரிய மதிமுக வேட்பாளா் துரை வைகோ

புதுகையில் கூட்டணித் தலைவா்களிடம் துரைவைகோ ஆதரவு கோரினாா்

திருச்சி மக்களவைத் தொகுதியின் திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளா் துரை வைகோ, வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்களிடம் ஆதரவு கோரினாா்.

திருச்சி மக்களவைத் தொகுதியின் திமுக கூட்டணி மதிமுக வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா், வியாழக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தாா். திமுக அலுவலகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகர திமுக செயலா் ஆ. செந்தில் உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்ற அவருக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் தலைமையில், மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா். தொடா்ந்து மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதியின் வீட்டுக்குச் சென்று ஆதரவு கோரினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் தலைமையில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை உள்ளிட்டோரும் வரவேற்றனா். இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள், ஆம்ஆத்மி, வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி அலுவலகங்களுக்கும் துரை வைகோ நேரில் சென்று ஆதரவு திரட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com