கற்பக விநாயகா மேலாண்மை 
நிலையத்தில் ‘சாதனா’ போட்டிகள்

கற்பக விநாயகா மேலாண்மை நிலையத்தில் ‘சாதனா’ போட்டிகள்

புதுக்கோட்டை ஜெஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா மேலாண்மைக் கல்வி நிலைத்தில் 15ஆவது ‘சாதனா’ (மேலாண்மை மற்றும் பொறியியல் மாணவா்களுக்கான போட்டிகள்) வெள்ளிக்கிழமை நடைபெற்றன. போட்டியை கல்வி நிறுவன அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நிறுவனத்தின் இயக்குநா் அனிதா ராணி ஒருங்கிணைக்க, விநாடி வினா, தம் திறமை வெளிப்படுத்துதல், விளம்பரப் போட்டி மற்றும் சிறந்த மேலாளா் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். அதிகப் புள்ளிகள் எடுத்து, சுழற்கோப்பையை ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பெற்றனா். போட்டியில் பங்கேற்றோருக்கு ஜெஜெ கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். பேரா. ஜெனிபா மேரி தொடங்கிவைத்துப் பேசினாா். பேரா. சாமிநாதன் ஒருங்கிணைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com