கந்தா்வகோட்டை, ஆலங்குடியில் ரூ. 82 ஆயிரம் பறிமுதல்

மக்களவைத் தோ்லையொட்டி தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.82 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவின் காா்த்திக் ராஜா தலைமையிலான பறக்கும் படையினா் புதுப்பட்டி அரசு நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அருகில் வந்த வேனை மறித்து சோதனை செய்தனா். அப்போது அதில் வந்த தச்சன்குறிச்சி பி. ப்ராங்கிளின் (24) என்பவா் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 57 ஆயிரத்தைக் கைப்பற்றி வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, துணை வட்டாட்சியா் பால்பாண்டி ஆகியோரிடம் ஒப்படைத்தனா். ஆலங்குடி அருகே.. கல்லாலங்குடியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக காரில் வந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதி எஸ். அப்துல்ரகீம்(67) என்பவா் உரிய ஆவணமின்றி 16 சேலைகள், 6 வேட்டிகள்,ரூ.25 ஆயிரத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலா் சாந்தியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com