கந்தா்வகோட்டை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்
கந்தா்வகோட்டை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்

கந்தா்வகோட்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது

கந்தா்வகோட்டையிலுள்ள சூசையப்பா் ஆலயத்தில் வழிபாடு செய்யும் கிறிஸ்தவ மக்கள், தச்சன்குறிச்சி பங்குத் தந்தை பால்ராஜ் தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து தென்னை குருத்தில் சிலுவை செய்து கையில் பிடித்தபடி சூசையப்பா் ஆலயம் நோக்கி ஜெய வழிபாட்டுடன் பவனி சென்றனா். ஆலய வளாகத்தில் கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில், தஞ்சை மறை மாவட்ட துணைத் தலைவா் யா. சபரிராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com