சீவல் வியாபாரியிடம் ரூ. 87 ஆயிரம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளத்தைச் சோ்ந்த சீவல் வியாபாரியிடமிருந்து ரூ. 87,170-ஐ தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கையின்போது பறிமுதல் செய்தனா். புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் மக்களவைத் தோ்தலுக்கான நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் வந்த அண்டகுளத்தைச் சோ்ந்த சன்னாசி மகன் நாகராஜ் (69) என்பவரிடம் ரூ. 87,170 பணம் இருந்தது. சீவல் வியாபாரம் செய்து வரும் தான், பேராவூரணி பகுதிகளில் வசூல் முடித்து அந்தப் பணத்தை எடுத்து வருவதாகத் தெரிவித்தாா். என்றாலும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட இந்தப் பணம், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியரும் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. ஐஸ்வா்யாவிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com