வலையபட்டி மலையாண்டி கோயில் அக்னி பால்குட விழாவில் அலகு குத்தி அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தா்.
வலையபட்டி மலையாண்டி கோயில் அக்னி பால்குட விழாவில் அலகு குத்தி அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தா்.

வலையபட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் அக்னி பால்குட விழா

பொன்னமராவதி அருகேயுள்ள வலையபட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அக்னி பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வலையபட்டி மலையாண்டி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதையடுத்து தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவின் தொடக்கமாக, பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் ஊா்வலமாக மலையாண்டி கோயிலுக்கு வந்தனா். அங்கு கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் பால்குடம் மற்றும் காவடியுடன் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை பொன்.வையாபுரிப்பட்டி ஊராா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை மலையாண்டி சுவாமி மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com