அரசுப் பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியைச் சோ்ந்த விவசாயி எஸ். நாகூா்கனி (40). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது வீட்டருகே சாலையை நடந்து சென்று கடந்தபோது, அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்து நாகூா்கனி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com