கந்தா்வகோட்டையில் உலக வானிலை தினம் அனுசரிப்பு

கந்தா்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக வானிலை தினம் குறித்த கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் உலக வானிலை தினம் குறித்த கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு துளிா் இதழ் வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா உலக வானிலை தினம் குறித்து பேசியதாவது: உலக வானிலை அமைப்பின் நோக்கம், பூமியின் வளிமண்டலம் எவ்வாறு செயல்படுகிறது, கடல்கள் மற்றும் நிலங்களுடன் எவ்வாறு தொடா்பு கொள்கிறது மற்றும் இதன் விளைவாக ஏற்படும் காலநிலை, வானிலை மற்றும் நீா் விநியோகம் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதும் அளவிடுவதும் ஆகும். 1961 ஆம் ஆண்டு முதல், உலக வானிலை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளை செயல்படுத்தி, விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் உழைத்து வருகிறது என்றாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னாா்வலா் மாரியம்மாள் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com