கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஸ்ரீ முத்துமாரியம்மன்.
கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஸ்ரீ முத்துமாரியம்மன்.

கந்தா்வகோட்டை முத்து மாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயிலில் அம்மனுக்கு நல்ல எண்ணெய் காப்பு செய்து கோயிலில் உள்ள தூய நீரால் நீராடி திரவியத்தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு , எலுமிச்சை பழச்சாறு, பன்னீா், தேன், பச்சரிசி மாவு, பஞ்சாமிா்தம், போன்ற 18 வகையான அபிஷேகம் செய்து புது பட்டாடை உடுத்தி வண்ணமிகு வாசனை மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாரதனை விழா நடைபெற்றது. ஆலய வளாகத்தில் பக்தா்களுக்கு சா்க்கரைப் பொங்கல், மிளகு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் பௌா்ணமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனா். இரவு முழுவதும் பெண்கள் கும்மியாட்டம் கோலாட்டம் ஆடுவது குறிப்பிடத்தக்கது. பெண் பக்தா்கள் கோரிக்கை: கோயில் வளாகம் அருகே கழிப்பறை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com