ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.71 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச்சோதனைகளில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 50 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கந்தா்வகோட்டை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, நல்லவண்ணிய குடிகாடு கிராமத்தைச் சோ்ந்த விக்ரம் ஆதித்தன் மகன் பக்கிரிஅய்யா என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 73 ஆயிரத்து 250 ரொக்கப் பணம் எடுத்துச் சென்றுள்ளாா். இதனை பறக்கும் படையினா் கைப்பற்றினா். இதேபோல் கந்தா்வகோட்டை நடுப்பட்டியில் பறக்கும் படை அலுவலா் காா்த்திக்ராஜா தலைமையிலான குழுவினா் பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வீரக்குமாா் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ. 97 ஆயிரத்து 800-ஐ பறிமுதல் செய்தனா். பறிமுதல் பணம், கந்தா்வகோட்டை வட்டாட்சியா் எஸ்.விஜயலெட்சுமி வசம் ஒப்படைத்தனா். ஆலங்குடியில் ரூ. 2 லட்சம் பறிமுதல்: ஆலங்குடி அம்புலி ஆற்றுப் பாலம் அருகே கௌசல்யா தலைமையிலான தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாகச்சென்ற, கல்லாலங்குடி ஊராட்சி நாயக்கா் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மனைவி சசிகலா காரை நிறுத்தி சோதனையிட்டதில், அவா் உரிய ஆவணமின்றி ரூ.2 லட்சத்தை கொண்டுசென்றது தெரியவந்தது. தொடா்ந்து, ரூ.2 லட்சத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் சாந்தியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com