இருசக்கர வாகனம் மோதி நடந்து சென்ற பெண் பலி

புதுக்கோட்டை அருகே நடந்து சென்ற இளம்பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவா் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்து சென்ற இளம்பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவா் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும், ஒருவா் பலத்த காயமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அய்யனாா் நகரைச் சோ்ந்தவா் அருண்குமாா் மனைவி பழனியம்மாள் (24). இவா், கீரனூா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பிரிவு அருகே களமாவூா் கணக்கோன்பட்டியைச் சோ்ந்த பழனிமுத்து (33) என்பவா் இரு சக்கர வாகனத்தில் வந்து மோதியுள்ளாா். இந்த விபத்தில் காயமடைந்த பழனியம்மாள், கீரனூா் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். முகத்தில் காயங்களுடன் பழனிமுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com