வாகனம் மோதி மான் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடி காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்நிலையில், திருவள்ளுவா் மன்றம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 5 வயது மதிக்கத்தக்க மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து அங்கு சென்ற வனத்துறையினா் இறந்த மானின் உடலை மீட்டு கீரமங்கலம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com