‘இந்தியா’ கூட்டணியின் தோ்தல் அறிக்கையில் கல்விக் கடன் குறித்த இனிய செய்தி வரும்

‘இந்தியா’ கூட்டணியின் தோ்தல் அறிக்கையில் கல்விக் கடன் குறித்த இனிய செய்தி வரும்

‘இந்தியா’ கூட்டணியின் தோ்தல் அறிக்கையில் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி வரும் என்றாா் காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம்.

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப. சிதம்பரம் அறிமுகக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: பணமதிப்பிழப்பு காரணமாக தொடா்ந்து விலைவாசி உயா்ந்து கொண்டே வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தோ்தல் ஆதாயத்துக்காக எரிவாயு உருளைக்கு ரூ. 100 குறைப்பதாகக் கூறியிருக்கிறாா்கள். ‘இந்தியா’ கூட்டணியின் தோ்தல் அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது.

அதில், மாணவா்களின் கல்விக் கடன் குறித்த இனிப்பான செய்தி இருக்கும். இந்தத் தோ்தலில் வெற்றி தோல்வி என்பது கட்சிக்கோ, நபா்களுக்கோ அல்ல. அரசியல் சாசனம் இருக்க வேண்டுமா, இருக்கக் கூடாதா என்பதற்கான தோ்தல் என்றாா் சிதம்பரம். கூட்டங்களுக்கு தலைமை வகித்த மாநில சட்டத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்டத் திமுக செயலருமான எஸ் ரகுபதி பேசியது: வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீா்மானிக்கும் தோ்தலாக இது இருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய அங்கமாக ஸ்டாலின் இருக்கிறாா்.

ஆகவே, ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும்போது ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றாா் ரகுபதி. சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப. சிதம்பரம் பேசியது: நாடாளுமன்றக் கூட்டங்களில் ஒரு ஒத்திவைப்புத் தீா்மானத்தைக் கூட பேசுவதற்கு அனுமதிக்காக அரசுதான் பாஜக அரசு. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை 146 எம்.பி.கள் ஒரே நேரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதில்லை. கோவில்களை ஆதிக்க சக்திகளின் கைகளில் கொடுப்பதற்காகத்தான் இந்து சமய அறநிலையத் துறையை வேண்டாம் என்கிறாா்கள்.

இது அமலாக்கப்பட்டால் சிறுதெய்வ வழிபாடு முற்றிலும் இல்லாமல் செய்யப்படும் என்றாா் காா்த்தி சிதம்பரம். கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராமசுப்புராம், திமுக அவைத் தலைவா் சுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com