கந்தா்வகோட்டையில் ‘அனைவரும் வாக்களிப்போம் உறுதிமொழி’ கையொப்ப இயக்கம்

படம். 27. ஓயஓ.
படம். 27. ஓயஓ.

கந்தா்வகோட்டையில் அனைவரும் தோ்தலில் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உறுதிமொழி கையொப்ப இயக்கத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வ.சரவணன் (நிலம் எடுப்பு), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மற்றும் பழங்குடியின அலுவலரும், கந்தா்வகோட்டை தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஸ்ரீதா் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டாட்சியா் எஸ். விஜயலெட்சுமி, தோ்தல் துணை வட்டாட்சியா் பால்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய தோ்தல் ஆணையம் மக்களவை தோ்தல் 2024 திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதிக்குள்பட்ட 178, கந்தா்வகோட்டை (தனி ) சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டை தாலுகாவில் ‘தோ்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்’ எனவும், 19. 4 .2024 அன்று நடைபெறும் தோ்தல் திருவிழாவில் அனைவரும் வாக்களிப்போம் என்ற மாபெரும் உறுதிமொழி கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து வட்டாட்சியா் சிவாஜிராஜன், தோ்தல் உதவியாளா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் ராஜேந்திர குமாா், கந்தா்வகோட்டை கிராம நிா்வாக அலுவலா் தமிழரசன் மட்டங்கால் கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் மற்றும் வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியின் சிறப்பாக மூன்றாம் பாலினத்தவா் லாவண்யா முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com