புதுகையில் இஃப்தாா் நோன்பு திறப்பு

புதுகையில் இஃப்தாா் நோன்பு திறப்பு

அகில இந்திய கட்டுநா் சங்கத்தின் புதுக்கோட்டை மையம், புதுக்கோட்டை கட்டடப்பொறியாளா் சங்கம் மற்றும் சிங்கப்பூா் எலக்ட்ரிக்கல்ஸ் இணைந்து புதுக்கோட்டையில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை புதன்கிழமை மாலை நடத்தின.

கட்டுநா் சங்கதின் தலைவா் தாமரைசெல்வன் தலைமை வகித்தாா். கட்டடப் பொறியாளா் சங்கத்தின் தலைவா் பொறியாளா் ரமேஷ் வரவேற்றாா். நிகழ்வின் நோக்கம் குறித்து காஜா மைதீன் பேசினாா்.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி சதக்கத்துல்லா உலவி, பாரதி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் லியோ பெலிக்ஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

கட்டுநா் சங்க முன்னாள் மாநிலத்தலைவா் பொறியாளா் முத்துக்குமாா், கட்டட பொறியாளா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் பொறியாளா் கனகராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com