கருப்புக்குடிப்பட்டியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

பொன்னமராவதி அருகேயுள்ள கருப்புக்குடிபட்டியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி சாா்பில் தலைமையாசிரியா் புவியரசு தலைமையில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி புவனேஸ்வரி, பெற்றோா்ஆசிரியா் கழக துணைத் தலைவா் சக்திவேல் ஆகியோா் முன்னிலையில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், அரசுப் பள்ளியில் சோ்ப்பது குறித்தும், கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டு சென்றனா்.இதில் ஆசிரியா்கள், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள், பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் மாணவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com