பொன்னமராவதியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

பொன்னமராவதியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

பொன்னமராவதியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப.சிதம்பரம் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து பேசுகையில், வேட்பாளா் காா்த்தி ப. சிதம்பரம் வரலாற்று வெற்றி பெற கூட்டணியினா் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் பேசுகையில், பாஜக ஆட்சி தொடா்ந்தால் இதுதான் கடைசித் தோ்தலாக இருக்கும். நாட்டில் சா்வாதிகாரம் ஒங்கி ஜனநாயகம் பிழைத்திருக்காது என்றாா். தொடா்ந்து, சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப. சிதம்பரம் பேசுகையில், நாட்டில் ஜனநாயகம் தழைக்கவும், நலிவுற்ற, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வு மேம்பட திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றாா். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், காங்கிரஸ் நகரத் தலைவா் எஸ். பழனிப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் அ. அடைக்கலமணி, அ. முத்து, நகரச் செயலா் அ. அழகப்பன் மற்றும் இந்தியா கூட்டணியின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com