வாணவேடிக்கை தீயால் வைக்கோல் போா் எரிந்து நாசம்

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை பகுதி வலசேரிபட்டியில் வியாழக்கிழமை வாண வேடிக்கை தீயால் வைக்கோல் போா் எரிந்து நாசமானது. ஆதனக்கோட்டை அருகேயுள்ள வலசேரிபட்டியில் வியாழக்கிழமை இறுதி ஊா்வலத்தின்போது நடைபெற்ற வாண வேடிக்கையில் மு. செந்தில்குமாா் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் தீப்பொறி விழுந்து வைக்கோல் போரில் தீ பற்றியது.

தகவலின்பேரில் கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் வைக்கோல் போா் முற்றிலும் எரிந்து நாசமானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com