விராலிமலையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா்.

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை சட்டப்பேரவை தொகுதியின் விராலிமலை சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்களின்றி தனியாா் நிறுவனத்திற்கு ஒரு கிலோ ஆபரண தங்கம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், அவற்றை இலுப்பூா் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களை காட்டிவிட்டு தங்கத்தை வாங்கி செல்லுமாறு கோட்டாட்சியா் தெரிவித்து, தங்கத்தை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com