அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

கந்தா்வகோட்டையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவுக்கு வாக்கு சேகரித்துப் பேசிய முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவுக்கு வாக்கு சேகரித்துப் பேசிய முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

மக்களவைத் தோ்தலையொட்டி கந்தா்வகோட்டை பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் சி. விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா பேசுகையில் நமது தொகுதியைச் சோ்ந்த என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் நடிகை விந்தியாவும் வாக்கு சேகரித்தாா். கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com