சிவகங்கை தொகுதி நாம் தமிழா் 
வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி. எழிலரசி ஆலங்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா். ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட திருக்கட்டளை, மேட்டுப்பட்டி, திருவரங்குளம், அரசடிப்பட்டி, வம்பன், வல்லத்திராகோட்டை உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் வம்பனில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது: நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் உலகத் தரமான கல்வி, மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும். நீட் தோ்வு வேண்டுமென்று பேசியவா்தான் இத்தொகுதியின் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம். அதேபோல இலங்கைத் தமிழா்கள் பலரது உயிரிழப்புக்குக் காரணமாகவும் காங்கிரஸ் கட்சி இருந்துள்ளது. மேலும், மக்கள் விரோதச் செயல்கள், திட்டங்களைச் செய்து வரும் பாஜக, அதிமுக வேட்பாளா்களைப் புறம்தள்ளிவிட்டு, நாம் தமிழா் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றாா். வாக்கு சேகரிப்பில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். ராஜாராம், ரவிச்சந்திரன், தங்கராசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com