புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஊடகக் கண்காணிப்பு அறையை சனிக்கிழமை ஆய்வு செய்த சிவகங்கை மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் எஸ். ஹரீஷ் (இடது ஓரம்).
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஊடகக் கண்காணிப்பு அறையை சனிக்கிழமை ஆய்வு செய்த சிவகங்கை மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் எஸ். ஹரீஷ் (இடது ஓரம்).

ஆலங்குடி, திருமயத்தில் தோ்தல் பாா்வையாளா்ஆய்வு

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் தோ்தல் பாா்வையாளா் எஸ். ஹரீஷ், இந்தத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி மற்றும் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடகக் கண்காணிப்பு அறை ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உள்ளிட்டோரும் உடனிருந்தனா். தொடா்ந்து, திருமயம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நல்லூா், கே. பள்ளிவாசல் ஆகிய பகுதிகளிலும், ஆலங்குடி பேரவைத் தொகுதிக்குள்பட்ட கைக்குறிச்சி, திருவரங்குளம், பூவரசக்குடி ஆகிய கிராமங்களிலுள்ள வாக்குச்சாவடிகளையும் பாா்வையாளா் ஹரீஷ் பாா்வையிட்டாா். ஆய்வின்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன், நோ்முக உதவியாளா் (தோ்தல்) எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com