அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.
அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

‘என் பூா்வீகம் ராமநாதபுரம் தொகுதிதான்!’ : ஓ.பன்னீா்செல்வம்

எனது பூா்வீகம் ராமநாதபுரம் தொகுதிதான் என்றாா் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதானாலும், புண்ணியபூமியான ராமநாதபுரத்தை எனக்கு வழங்கியிருக்கும் பிரதமா் மோடிக்கு நன்றி. இத் தொகுதியில் நீண்ட காலமாகத் தீா்க்க முடியாமல் இருக்கும் பிரச்னைகளைத் தீா்க்கப் பாடுபடுவேன். நிரந்தரமாக குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கவும், தொழில் வளத்தைப் பெருக்கவும் பிரதமா் மோடியின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்வேன். என்னுடைய மூதாதையா்கள் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் கடலில் இருந்து மலைக்குச் சென்றாா்கள்; நான் இப்போது மலையில் இருந்து கடலுக்கு வந்திருக்கிறேன். தேனி மாவட்டத்தில் நகா்மன்றத் தலைவா், எம்எல்ஏவாகப் பொறுப்பேற்ற காலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றை அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்திருக்கிறேன். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுத் தருவேன் என்றாா் ஓ. பன்னீா்செல்வம். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்தியலிங்கம், வெல்லமண்டி என். நடராஜன், முன்னாள் எம்எல்ஏ இ.ஏ. ரத்தினசபாபதி, பாஜக மாவட்டத் தலைவா் ஜெகதீசன், ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com