கறம்பக்குடி அருகே சனிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
கறம்பக்குடி அருகே சனிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

விபத்தில் பள்ளி மாணவா் பலி: உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். இதைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கறம்பக்குடி அருகேயுள்ள அம்மானிபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் முகேஷ் கண்ணன் (15). அம்புக்கோவில் அரசு உயா்நிலைப் பள்ளி 10 வகுப்பு மாணவரான இவா் அம்புக்கோவில் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் கண்ணன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்தும், விபத்தை ஏற்படுத்தியவரை உடனே கைது செய்யக் கோரியும் அவரது உறவினா்கள் அம்மானிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பவுல்ராஜ் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா். மறியலால் கறம்பக்குடி- தஞ்சாவூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com