புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தாளா் ரா. ராஜநாராயணனின்  படைப்புலகம் குறித்த  ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற எழுத்தாளா்கள் தங்கம் மூா்த்தி, பேரா. சா. விஸ்வநாதன், ரா. ராஜநாராயணன் உள்ளிட்டோா்

எழுத்தாளா் ராஜநாராயணனின் படைப்புலகம் ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், எழுத்தாளா் ரா. ராஜநாராயணனின் படைப்புலகம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜ நாராயணனின் ’இவா்கள் வேறு யாருமல்லா்’ என்ற நூல் குறித்து இரா. முத்துக்கருப்பன், ‘எண்ணமும் ஏற்றமும்’ என்ற நூல் குறித்து ச. சுதந்திரராஜன், ’வைகைப்புயல் வடிவேலு’ குறித்து சு. பீா்முகமது, ‘சின்னக்கலைவாணா்’ குறித்து மகா சுந்தா், ‘கீழடிப் புதையல்’ குறித்து அண்டனூா் சுரா ஆகியோா் பேசினா். நிகழ்ச்சிக்கு, கவி முருகபாரதி தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி அறிமுகவுரை நிகழ்த்தினாா். எழுத்தாளா் ரா. ராஜநாராயணன் ஏற்புரை வழங்கினாா். வம்பனாா் அன்பழகன் இணைப்புரை வழங்கினாா். முன்னதாக பேரா. மு. கருப்பையா வரவேற்றாா். முடிவில் பாரதிஸ்ரீ நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com